ஹஜ் சட்டமூலம் பெப்ரவரியில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் – அமைச்சர் ஹலீம்

முஸ்­லிம்­களின் ஹஜ் கட­மையை சீரான முறையில் சட்ட ரீதியில் முன்னெடுக்க முஸ்லிம் சமய மற்றும் தபால்,தபால் சேவைகள் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் எதிர்வரும் பெப்­ர­வரி மாதத்தில் சட்­ட­மூ­ல­மொன்­றினை பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.

எதிர்­வரும் ஜன­வரி மாதத்தில் இந்தச் சட்­ட­மூ­லத்தை பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்கத் திட்­ட­மிட்­டி­ருந்­தாலும் முஸ்லிம் தனியார் சட்­டத்தில் திருத்­தங்­களைச் செய்­வ­தற்­காக நிய­மிக்­கப்­பட்­டி­ருந்த முன்னாள் உயர்­நீ­தி­மன்ற நீதி­ய­ரசர் சலீம் மர்­சூபின் தலைமையிலான குழு­வி­னரின் அறிக்கை தாம­தப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­த­னாலே ஹஜ் சட்டமூலத்தையும் தாம­தப்­ப­டுத்த வேண்­டி­யேற்­பட்­ட­தாக அமைச்சர் ஹலீம் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் தனியார் சட்ட திருத்­தங்­களைச் செய்­வ­தற்கு நிய­மிக்­கப்­பட்­டுள்ள குழுவின் தலைவர் சலீம் மர்­சூபே ஹஜ் சட்ட மூல வரை­பு­களைத் தயா­ரிக்கும் குழு­வுக்கும் தலை­வ­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

ஹஜ் கோட்டா பகிர்வு முறைக்கு உயர்­நீ­தி­மன்றம் ஏற்­க­னவே வழங்­கி­யுள்ள வழிமுறைகள்(Guide Lines) மீறப்­பட்­டுள்­ள­தாக 2015 ஆம் ஆண்டு கோட்டா பகிர்­வுக்கு எதி­ராக ஹஜ் முக­வர்கள் சிலரால் தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள வழக்கு விசா­ரணை எதிர்­வரும் ஜன­வரி மாதம் 26 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.