சஷி வெல்கம இனது விளக்கமறியல் நீடிப்பு..

இலங்கை போக்குவரத்து சபையின் முன்னாள் தலைவர் சஷி வெல்கம இன்று(22) கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அவரது விளக்கமறியல் எதிர்வரும் 26ம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.

இவர் போக்குவரத்து சபையின் தலைவராக இருந்த போது இடம்பெற்ற 126 மில்லியன் நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, சஷி வெல்கம, குற்றப்புலனாய்வு பிரிவினரால் நேற்று முன்தினம்(20) கைது செய்யப்பட்டார்.

மேலும், இலங்கை போக்குவரத்து சபையின் முன்னாள் அமைச்சர் குமார வெல்கமவின் நெருங்கிய உறவினர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.