இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டு குறித்த ட்ரம்பின் தீர்மானம் விரைவில்…

ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக அமெரிக்காவின் புதிய அரசாங்கத்தின் தீர்மானம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் அறிவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள இந்த குற்றப்பிரேரணையை நீக்கிக் கொள்வதற்கான அதிகாரம் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் கையில் உள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த யோசனையை வாபஸ் வாங்குமாறு ட்ரம்பிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.