அரசாங்கத்தின் தூர நோக்கில்லாத நடவடிக்கையின் பின்விளைவே அரிசியின் விலை அதிகரிக்க காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
இன்னும், விரைவில் மீண்டும் அரிசியின் விலை அதிகரிப்பதற்கான அபாயம் உள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
அரிசி தட்டுப்பாடு தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.