கோவாவில் உள்ள டபோலிம் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் ஒன்று பாதையை விட்டு விலகி (சறுக்கி) விபத்துக்குள்ளாகி உள்ளது.
டபோலிம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மும்பை புறப்பட்டுச் சென்ற விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், விமான விபத்தில் 161 பயணிகளில் 15 பயணிகள் படுகாயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
விமான நிலைய ஓடுதளம் முடங்கியதால், விமான நிலையம் மூடப்பட்டுள்ளதாகவும் விமான சேவை சரி செய்யப்பட்டு விமான நிலையம் திறந்து வைக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விபத்து தொடர்பில் விமான விபத்து விசாரணை பிரிவு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.