அரிசி மாபியாவின் பின்னணியில் ஜனாதிபதியின் சகோதரர் இருக்கலாம் – அஜித் பீ.பெரேரா

அரிசி அல்லது நெல் மாபியாவின் பின்னணியில் அமைச்சர் ஹரிசன் இல்லை என்பது முழு நாட்டிற்கும் நன்றாகவே தெரியும், என்றாலும் அதன் பின்னணியில் ஜனாதிபதியின் சகோதரர் இருக்கலாம் என பிரதியமைச்சர் அஜித் பீ.பெரேரா சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

நேற்று(29) சிரிகொத தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்திருந்தார்.

மின்சார உற்பத்தியில் டீசல் மாபியா  நடைமுறைப்படுத்தப்படுவது போல நெல் தொடர்பிலும் மாபியா ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும், அதற்கு பெரிய நெற் கலஞ்சியங்களினைக் கொண்டுள்ள உரிமையாளர்களே பொறுப்புக்கூற வேண்டும் எனவும் பிரதியமைச்சர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

அவ்வாறானோர் ஊடகங்கள் முன்னிலையில் பல்வேறு கருத்துக்களைக் கூறி பொதுமக்களை மழுப்படிக்க முனைகின்றதாகவும் அஜித் பீ.பெரேரா மேலும் குற்றம் சாட்டியிருந்தார்.