ஐக்கிய நாடுகள் சபையின் புதிய பொதுச் செயலாளராக போர்த்துக்கல் நாட்டின் முன்னாள் பிரதமர் ஆன்டோனியோ கட்டரஸ் பொறுப்பேற்றார்.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளராக இருந்த பான்-கி-மூனின் பதவிக் காலம் டிசம்பர் 31ம் திகதியுடன் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து புதிய பொதுச்செயலாளராக ஐ.நா.வின் அகதிகள் அமைப்பின் முன்னாள் தலைவருமான ஆன்டோனியோ கட்டரஸ் முறைப்படி நேற்று (01) பொறுப்பேற்றார்.
இதற்கமைய 2021 டிசம்பர் 31ம் திகதி வரை அப்பதவியில் தொடர்வார்.
இதனைத் தொடர்ந்து கட்டரஸ் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டதாவது;
உலக மக்கள் அனைவரும் முதலில் அமைதியை நிலை நாட்டுவதையே புத்தாண்டு உறுதி மொழியாக ஏற்க வேண்டும். உலக அமைதிக்கே முக்கியத்துவம் அளிப்பேன். நாடுகளுக்கு இடையே பிரச்சினைகளை தீர்க்கும் நோக்கத்தில் எனது பணியை தொடருவேன் என அவர் தெரிவித்தார்.