புதிதாக வெளியிட்டுள்ள “மூமென்ட்ஸ்” என்கிற ஆப்பை (app), தற்போது ஐரோப்பாவில் அறிமுகப்படுத்த போவதில்லை என பேஸ்புக் தெரிவித்துள்ளது.
இப்புதிய அப்ளிகேஷனில் முகத்தோற்றத்தை கண்டறியும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் போனில் இருக்கும் கெமரா புகைப்பட தொகுப்பிலிருந்து படத்தை டேக் செய்யும் போது, இந்த ஆப் புகைப்பட தொகுப்பை ஸ்கேன் செய்து குறிப்பிட்ட நண்பரின் புகைப்படங்களை மட்டும் தேர்ந்தெடுக்க வழி செய்கிறது.
மூமென்ட்ஸ் ஆப்பில் (app) பயன்படுத்தப்பட்டுள்ள முகத்தோற்றத்தை கண்டறியும் தொழில்நுட்பத்திற்கு ஐரோப்பநாடுகளின் இணைய சேவை கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஒப்புதல் அளிக்காததை அடுத்தே அங்கு மூமென்ட்ஸ் ஆப் வெளியிடப்படவில்லை.
இது தங்களுக்கு தேவையென்றால் பயனாளர்களே தறவிரக்கம் செய்துக்கொள்ளும் வகையில் மேம்படுத்தப்பட்ட ஆப்(app), ஐரோப்பாவில் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என பேஸ்புக் நிர்வாகிகள் மேலும் தெரிவித்துள்ளானர்.