2017ம் ஆண்டு தொடக்கம் புலம் பெயர் தொழிலாளர்களுக்கு விசேட ஓய்வூதிய திட்டம் வழங்கவுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் நேற்று(02) இடம் பெற்ற விசேட கலந்துரையாடலில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் வெளிநாடுகளில் கடந்த காலங்களில் குடியேறிய தொழிலாளர்கள் மற்றும், இவ்வருடம் வெளிநாடுகளை நோக்கி குடிப்பெயரும் பணியாளர்களின் நலத்திட்டம் தொடர்பில் விசேட கவனம் செலுத்துதல், போன்ற விடயங்கள் நடைமுறைப்படுத்தவுள்ளதாக இதன்போது அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.