தென்கொரியாவை அடுத்து தாய்லாந்திலும் 175 பேருக்கு மெர்ஸ் வைரஸ் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
மெர்ஸ் என்ற வைரஸ் நோய் தென்கொரியாவை ஆட்டிப்படைத்து வருகிறது. இந்த நோய்க்கு இதுவரை 23 பேர் பலியாகியுள்ளனர். ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த நோய் தாய்லாந்திற்கும் பரவியுள்ளது. அங்குள்ள ஒருவருக்கு இந்த நோய் இருப்பதை அந்நாட்டு அரசு உறுதிப்படுத்தியுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து தாய்லாந்திற்கு வந்த அவர் சுமார் 175 பேருடன் தொடர்புக்கொண்டுள்ளார். இதனால் அவர்கள் அனைவரும் பொது இடங்களில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவர்களின் கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டிருப்பதாக தாய்லாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
அதேசமயம் கடந்த 16 நாட்களில் முதல் முறையாக நேற்று புதிதாக ஒருவருக்கும் நோய் தொற்று ஏற்படவில்லை என தென்கொரிய சுகாதாரத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.