ஊழியர்களின் வேலை நாட்களை 5 நாட்களாக குறைக்க பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தொழில் ஆணையாளர் நாயகம் சாந்தனி அமரதுங்க தெரிவித்துள்ளார்.
இதன்பிரகாரம், தனியார் துறை ஊழியர்களின் பணி நேரத்தை 9 மணித்தியாலமாக மாற்றியமைக்கப்படவுள்ளது.
தேசிய தொழிலாளர் பேரவையில் இந்த விடயம் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தொழில் ஆணையாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட சகல தரப்புகளுடனும் எதிர்காலத்தில் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.