வெவ்வேறான மூன்று செய்தியாளர் சந்திப்பிலும் கேள்விகளுக்கு நழுவிச்சென்ற அமைச்சர்கள்.. [VIDEO]

ஹம்பாந்தோட்டை துறைமுக கைச்சாத்து, குளியாபிட்டியவில் அண்மையில் திறந்து வைக்கப்பட்ட சர்ச்சைக்குரிய வொக்ஸ்வேகன் (Volkswagen) தொழிற்சாலை குறித்து மற்றும் சமகால அரசியல் கருத்துக்கள் குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்காது அமைச்சர்கள் நழுவியமை குறித்து பலரால் பேசப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

நேற்று(05) கொழும்பில் இடம்பெற்ற வெவ்வேறான மூன்று செய்தியாளர் மாநாடுகளில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாது திண்டாடி அமைச்சர்கள் எழுந்து சென்றமையும் குறிப்பிடத்தக்கது.

ஊடகவியலாளர்களின் சரமாரியான கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல், திணறிப்போன அமைச்சர்கள் கேள்விநேரம் முடிவடைவதற்கு முன்னரே மிகவேகமாக எழுந்து, தங்களுக்கு முன்பாக இருந்த கோவைகளையும் அள்ளியெடுத்துக்கொண்டு, வெளியேறிவிட்டனர்.

நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கா மற்றும் மலிக் சமரவிக்கிரம ஆகியோர் ஒரு செய்தியாளர் சந்திப்பிலும், அமைச்சர் அகில விராஜ் காரியவசம் சிறிகொதவில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலும், ஸ்ரீ.லங்கா சுதந்திரக் கட்சி செய்தியாளர் சந்திப்பில் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் ஜோன் செனவிரத்ன ஆகிய அமைச்சர்களே இவ்வாறு ஊடகவியலாளர்களது கேள்விகளுக்கு பதிலளிக்காது நலுவிச் சென்றிருந்தனர்.

குறித்த காணொளி;

[youtube url=”https://www.youtube.com/watch?v=qrIVrb_923E” width=”560″ height=”315″]