இலங்கையில் எவ்வித முதலீடுகளும் இல்லை – வொக்ஸ்வேகன் தொழிற்சாலை உத்தியோகபூர்வ அறிவிப்பு..

இலங்கையில் தமது நிறுவனம் எவ்வித முதலீடுகளையும் மேற்கொள்ளவில்லை என ஜேர்மன் நாட்டின் மிகச் சிறந்த மோட்டார் வாகன தயாரிப்புக்களில் ஒன்றான வொக்ஸ்வேகன் மோட்டார் கார் தயாரிப்பு தொழிற்சாலை தெரிவித்துள்ளது.

தொழிற்சாலையின் தொடர்பாடல் பிரிவின் செய்தித் தொடர்பாளர் கர்டின் ஹோமான் இனை சகோதர ஊடகமொன்று தொடர்புகொண்டு வினவியபோது குறித்த தகவலினை உத்தியோகபூர்வமாக அவர்  தெரிவித்துள்ளார்.

இன்னும், வொக்ஸ்வேகன் தொழிற்சாலையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதத்தில் எதிர்வரும் 2025ம் ஆண்டு வரையில் இலங்கையுடனான எவ்வித முதலீடுகளும் உள்வாங்கப்பட்டில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

வொக்ஸ்வேகன் மோட்டார் கார் தயாரிப்பு தொழிற்சாலையின் கிளையை இலங்கையில் கடந்த 3ம் திகதி ஜனாதிபதி மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அடிக்கல் நாட்டு வைபவம் இடம்பெற்றதோடு; இதன் மூலம் அந்தப் பகுதியில் இளைஞர் மற்றும் யுவதிகளுக்கு அதிகமான வேலைவாய்ப்புகளை பெற்றுக் கொடுக்க முடியும் என்றும் நம்பிக்கை வெளியிடப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

[youtube url=”https://www.youtube.com/watch?v=paZVRU3HeD8″ width=”560″ height=”315″]