ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் இடம்பெற்ற எதிர்ப்பு நடவடிக்கையில் 21 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுள் பாதுகாப்பு தரப்பைச் சேர்ந்த மூன்று அதிகாரிகளும் உள்ளடங்குவதாக ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சுமித் மனதுங்க தெரிவித்தார்.
மேலும் கல் வீச்சு தாக்குதலில் காயமடைந்தவர்களே அதிகமானவர்கள் என அவர் கூறினார்.
——————————————————————————————————————————————————————
ருஹுனு அபிவிருத்தி வலயத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு எதிர்ப்புக்கு மத்தியில் இடம்பெற்றது..
Jan 7, 2017 @ 12:18
ருஹுனு அபிவிருத்தி வலயத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று(07) காலை ஆரம்பிக்கப்பட்டது.
இலங்கை மற்றும் சீனா நிறுவனம் ஆகியன இணைந்து இந்த கைத்தொழில் வலயத் திட்டம் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் சீன பிரதிநிதிகள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர்.
இதேவேளை, ருஹுனு அபிவிருத்தி வலயத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட போராட்டம் காரணமாக குறித்த பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டது.
மஹிந்த ஆதரவு அணியினர் உள்ளிட்ட பெருமளவான பொதுக்களும் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
