ஹம்பாந்தோட்டை வர்த்தக வலயத்தில் முதலீடு செய்கிறது சீனா…

எதிர்வரும் மூன்று முதல் ஐந்து ஆண்டு வரையான காலப்பகுதியில், ஹம்பாந்தோட்டை வர்த்தக வலயத்தில் 05 பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்ய சீனா முன்வந்துள்ளது.

ஒரு இலட்சம் தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தும் நோக்கில் குறித்த முதலீட்டை மேற்கொள்ளவுள்ளதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் யிசியென் லியேன் தெரிவித்துள்ளார்.

இன்று(07) இடம்பெற்ற ஹம்பாந்தோட்டை வர்த்தக வலய திறப்பு நிகழ்வில் கலந்து கொண்டிருந்த இலங்கைக்கான சீனத் தூதுவர் யிசியென் லியேன் இவ்வாறு கூறியுள்ளார்.