ஜி.எஸ்.பி. பிலஸ் வரிச்சலுகை மலையகம் நோக்கி…

ஜி.எஸ்.பி. பிலஸ் வரிச்சலுகை கிடத்தவுடன் மலையகத்தில் கைதொழில் பேட்டைகள் அமைக்கப்படுமென மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்திறிபால சிறிசேன பதவியேற்று இரண்டாவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் முலமாக பசும் பொன் வேலைதிட்டத்தின் கீழ் வீடுகள் கையளிக்கும் நிகழ்வின் போதே இதனை தெரிவித்தார்

மேலும் உறையாற்றிய அமைச்சர் இன்று சிலர் ஆட்சிமாற்றம் ஏற்பட போவதாக கூறிவருகிறார்கள்.

ஆனால் 2020ம் ஆண்டு வரை ஆட்சிமாற்றம் இடம்பெறாது இதனை நாட்டின் ஜனாதிபதியும், சபாநாயகரால் மாத்திரமே முடிவு செய்ய முடியுமென தெரிவித்தார்.

நாங்கள் நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரம் அல்ல பதுளை, மாத்தறை இரத்தினபுரி போன்ற மாவட்டங்களிலும் வாழும் மக்களுக்கு வீடுகளை அமைத்து கொடுத்து வருகின்றோம்.

மலையகத்தில் இன்று மாற்றமும் அபிவிருத்தியும் வந்திருக்கிறது.

அமைச்சர் மனோகணேசன், இராதகிருஸ்னண் ஆகியோரோடு இணைந்து ஒற்றுமையாக செயல்படுகின்றமையால் தான் மலையகத்தில் இன்று மாற்றம் வந்துள்ளதாக அமைச்சர் திகாம்பரம் மேலும் தெரிவித்தார்.