எல்லை நிர்ணய அறிக்கை – கட்சி தலைவர்களிடம் இன்று கையளிப்பு..

உள்ளூராட்சி மன்றங்களுக்கான எல்லை நிர்ணய குழுவின் அறிக்கை இன்று(09) கையளிக்கப்படவுள்ளது.

இதன்படி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடமும் கட்சி தலைவர்களிடமும் எல்லை நிர்ணய அறிக்கை கையளிக்கப்படவுள்ளதாக பிரதமர் அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த அறிக்கையில் பல்வேறு குறைப்பாடுகள் இருப்பதாக தெரியவருவதோடு, இன்று பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் வைத்து எல்லை நிர்ணய குழுவின் அறிக்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடவும் கட்சி தலைவர்களிடமும் கையளிக்கப்பட்டு இறுதி தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.

ஆனாலும் விகிதாசார தேர்தல் முறைமையின் கீழ் தேர்தல் நடத்தப்படுவதற்கான வாய்ப்புகளே அதிகம் காணப்படுவதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றன.