பா.உறுப்பினர் விமல் வீரவங்ச பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவில் ஆஜர்..

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவில் ஆஜராகியுள்ளார்.

கடந்த ஆட்சிக் காலத்தில் விமல் வீரவங்ச நிர்மாணம், பொறியியல் சேவைகள், வீடமைப்பு மற்றும் பொது வசதிகள் அமைச்சராக பதவி வகித்த வேளை, அந்த அமைச்சிற்கு சொந்தமான வாகனங்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முன்னதாகவும் சில சந்தர்ப்பங்களில் அவர் இவ்வாறு வாக்குமூலம் அளிக்க பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவில் ஆஜராகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.