நாட்டில் நிலவும் வரட்சியான காலநிலையினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு அரச அதிகாரிகள் மற்றும் முப்படைகள் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதற்கமைய அவசியமான குடிநீரை பெற்றுக் கொடுப்பதற்கு அரசு தற்போது தயாராகவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.