இன்று(17) நள்ளிரவு முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக லோகமோடரிங் ஒபரேடிங் இன்ஜினியர்களது ரயில் சாரதிகள் சங்கம் அறிவித்துள்ளது.
அதன் செயலாளர் இந்திக தொடங்கொட தெரிவிக்கையில்; சம்பளம் குறித்த பிரச்சினையினை முன்வைத்தே குறித்த வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவித்திருந்தார்.
அதன்படி இன்று நள்ளிரவு முதல் புகையிரத சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.