ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மொனராகலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பத்ம உதயசாந்த நிதி மோசடி விசாரணை பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.
அரச வாகனங்களை முறைக்கேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காகவே அவர் இவ்வாறு நிதி மோசடி விசாரணை பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.
பத்ம உதயசாந்த,மஹிந்த ஆட்சி காலத்தின் போது வீடமைப்பு அதிகார சபையின் செயற்பாட்டு பணிப்பாளராக இருந்த போதே இந்த குறித்த மோசடி இடம் பெற்றுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.