தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் மிட்செல் மார்ஷ் எஞ்சிய போட்டிகளில் விளையாடமாட்டார் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நேற்று(16) அறிவித்தது.
இதனால் தொடரில் எஞ்சிய போட்டிகளில் அவர் விளையாடமாட்டார் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது. அவருக்கு பதிலாக ஆல்-ரவுண்டர் மார்கஸ் ஸ்டோனிஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.
இவ்விரு அணிகள் இடையிலான 3-வது ஒரு நாள் போட்டி பெர்த்தில் நாளை மறுதினம்(19) நடக்கிறது.
கழுத்தில் காயத்தால் அவதிப்படும் ஆஸ்திரேலிய அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ் லின் இந்த ஆட்டத்தில் மட்டும் விளையாடமாட்டார். இதை கருத்தில் கொண்டு பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப் ஏற்கனவே அணிக்கு அழைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.