ஓரினச் சேர்க்கை சட்டபூர்வமாக்கப்படவுள்ளது….

175 ஆண்டுகள் பழைமை வாய்ந்த 1842ம் ஆண்டு திருத்தம் மேற்கொண்ட ஓரினச் சேர்க்கையின் தடையினை நீக்க அரசு கவனம் செலுத்தியுள்ளது.

அது குறித்த அமைச்சரவை பத்திரிகை இன்று(17) அல்லது அடுத்த வாரம் அமைச்சரவைக்கு முன்வைக்கவுள்ளதாக அரச வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது நடைமுறையிலுள்ள சட்டத்தின்படி ஓரினச் சேர்க்கை என்பது தடை செய்யப்பட்டுள்ளது. குறித்த அமைச்சரவை பத்திரம் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரவினால் முன்வைக்கப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.