அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய நிலக்கரி நிறுவனத்தின் சபையை கலைக்க தீர்மானம்…

நிலக்கரி நிறுவனத்தின் தலைவர் உட்பட பணிப்பாளர் சபையை கலைக்க மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தீர்மானம் மேற்கொண்டுள்ளார்.

புதுப்பிக்கத்தக்க சக்தி தொடர்பான கணக்காய்வாளர் நாயகத்தால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை ஆராயந்ததன் பின்னரே அவர் இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளார்.

2006 முதல் 2016 ஆம் ஆண்டு வரை நிலக்கரி கொள்வனவு தொடர்பான கணக்காய்வாளர் நாயகத்தின் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

தற்போதைய பணிப்பாளர் சபையை கலைத்துவிட்டு, முழுமையான கலந்துரையாடல்களின் பின்னர் புதிய பணிப்பாளர் சபை நிறுவுமாறு குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய பணிப்பாளர் சபை கலைக்கப்பட்டு, நிறுவனத்தின் பதில் தலைவராக, அமைச்சின் மேலதிக செயலாளர் மேரில் குணதிலக நியமிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நிறுவனத்தின் தலைவராக மைத்திரி குணரத்ன செயற்பட்டுவந்தமையும் குறிப்பிடத்தக்கது.