2000ம் ஆண்டு மைத்திரி படுகொலை முயற்சி வழக்கின் தீர்ப்பு இன்று (22)

பொலன்னறுவையில் வைத்து முன்னாள் அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்யும் வகையில் குண்டுத் தாக்குதல் நடத்தியது தொடர்பான வழக்கு விசாரணை மீதான தீர்ப்பு இன்று (22) வழங்கப்படும்.

2000 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்த மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்ய முயன்றார் என்ற குற்றச்சாட்டின் பேரில் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினரொருவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை கடந்த 15 வருடங்களாக நீடித்து வந்தமை குறிப்பிடத்தக்கது. இதன் மீதான தீர்ப்பே இன்று வழங்கப்படுகிறது.

பொலன்னறுவை மேல் நீதிமன்ற நீதிபதி அமேந்திர செனவிரத்ன முன்னிலையில் வழக்கு விசாரிக்கப்பட்டது.

சிவராஜா ஜெனீவன் என்ற சுல்தான் காதர் மொஹிதீன் என்ற சென்னன் என்ற பெயருடைய பிரதிவாதிகளுக்கு எதிராக மூன்று குற்றச்சாட்டுகளின் பேரில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணை தொடர்பான இறுதித் தீர்ப்பு இன்று 22 ஆம் திகதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றனர்