நீரினால் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் பாரிய வீழ்ச்சியில்…

நீரினால் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் 11 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் அதுல வன்னிஆரச்சி தெரிவித்துள்ளார்.

இலங்கை மின்சார சபையின், மின்சார உற்பத்தி வரலாற்றில் இவ்வாறான ஒரு நிலை இதற்கு முன்னர் ஏற்பட்டதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நிலவும் வறட்சியான காலநிலையே இதற்கான காரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.