இலங்கை அணி தலைவர் ஏஞ்சலோ மேத்யூஸ் இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் திலங்க சுமதிபால ஆகியோருக்கு இடையில் நீண்ட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது தென் ஆப்ரிக்காவுடனான எதிர்வரும் டி20 மற்றும் ஒருநாள் தொடரில் தனது அணி திறம்பட செயற்பட திட்டமிடுவதாக உறுதியளித்துள்ளார்.
கிரிக்கெட் தலைமையகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் கிரிக்கெட் சபை துணை தலைவர் ஜயந்த தர்மதாசோக மதிவாணன், தேர்வாளர்கள் தலைவர் சனத் ஜயசூரிய, பயிற்சியாளர் கிரஹாம் ஃபோர்ட், அணித்தலைவர் ஏஞ்சலோ மேத்யூஸ், அணி முகாமையாளர் ரஞ்சித் பெர்னாண்டோ, கிரிக்கெட் கமிட்டி தலைவர் அரவிந்த டி சில்வா, இலங்கை கிரிக்கெட் சபையின் செயலாளர் மோகன் டி சில்வா உயர் செயல்திறன் முகாமையாளர் சைமன் வில்லிஸ் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த கலந்துரையாடலின் போது தோல்வியை எதிர்வரும் போட்டியில் எவ்வாறு சிறப்பாக செயற்பட வேண்டும் என்பது தொடர்பாகவே கலந்தாலோசிக்கப்பட்டது.
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுவதுமாக இழந்தது.
அதுவும் 3வது டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 118 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவிடம் இலங்கை மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.