அத்துரலிய ரத்ன தேரர், தேசியப் பட்டியல் ஆசனத்தை மீள் ஒப்படைக்க வேண்டும் – ஜாதிக ஹெல உறுமய…

நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படப் போவதாக அறிவித்துள்ள அத்துரலிய ரத்ன தேரர், ஐ.தே.கவின் தேசியப் பட்டியல் ஆசனத்தை திருப்ப ஒப்படைக்க வேண்டும் என்று ஜாதிக ஹெல உறுமய பகிரங்க கோரிக்கை ஒன்றினை விடுத்துள்ளது.

சொந்த நிகழ்ச்சி நிரலின் கீழ் செயற்பட முடிவு செய்துள்ள அத்துரலிய ரத்தன தேரர், தேசியப் பட்டியல் ஆசனத்தை விட்டு விலகுவார் என்று எதிர்பார்ப்பதாக, ஜாதிக ஹெல உறுமயவின் ஆலோசகர் வண.ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

2015ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலின் போது ஐ.தே.கவுக்கும் ஜாதிக ஹெல உறுமயவுக்கு இடையில் செய்து கொள்ளப்படட உடன்பாட்டுக்கு அமையவே, அத்துரலிய ரத்ன தேரருக்கு ஐ.தே.கவின் தேசியப் பட்டியல் ஆசனம் வழங்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேசியப் பட்டியல் ஆசனத்தை விட்டு விலக மறுத்தால், அவருக்கு எதிராக ஐ.தே.க சட்ட நடவடிக்கை எடுக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அரசியல் வட்டாரங்களிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.