தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜ் ரவிராஜ் படுகொலை வழக்கில், கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து, தாக்கல் செய்யப்பட்ட மனு, விசாரணைகள் எதுவும் இன்றி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
நடராஜா ரவிராஜின் மனைவி சசிகலா ரவிராஜினால் இந்த மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது. எனினும் இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவிருந்த போது, சசிகலா ரவிராஜோ அவரது சட்டத்தரணிகளோ நீதிமன்றத்தில் முன்னிலையாகி இருக்கவில்லை.
இதானால் இந்த மனு ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2006ம் ஆண்டு நடராஜா ரவிராஜ் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த ஐந்து பேரையும் கடந்த டிசம்பர் மாதம் கொழும்பு மேல் நீதிமன்றம் விடுவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.