GSP பிளஸ் வரிச்சலுகையை வழங்குவது தொடர்பான இறுதி அறிவிப்பு எதிர்வரும் மே மாதம்…

இலங்கைக்கு GSP பிளஸ் வரிச்சலுகையை வழங்குவது தொடர்பான இறுதி அறிவிப்பை எதிர்வரும் மே மாதம் 12ம் திகதி ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றம் வெளியிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இலங்கைக்கு இந்த வரிச்சலுகையை வழங்குவதற்கான பரிந்துரை ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் எதிவரும் மார்ச் மாதம் 12ம் திகதி இது தொடர்பான விவாதம் இடம்பெறவுள்ளது.

இதன்போது ஏலவே இலங்கை அரசாங்கம் அமுலாக்குவதாக கூறி இருந்தாக கூறப்படும் 27 சர்வதேச சாசனங்களின் அமுலாக்கம் குறித்து அவதானம் செலுத்தப்படும் என்று கூறப்படுகிறது.