குழாய் நீரை வீண்விரயம் செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சு தெரிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று(19) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அதன் செயலாளர் நிமல் ஹெட்டியாராச்சி இதனை தெரிவித்திருந்தார்.
இதற்காக புதிய சட்டம் இயற்றுவதற்கு தற்போதைய நிலையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் நூற்றுக்கு 40 வீதமான நீர் வீண்விரயம் செய்யப்படுவதாக அவர் தெரிவித்தார்.