நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, முன்னாள் பிரதி அமைச்சர் சரத் குமார குணரத்னவை கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று(20) பிணையில் விடுவித்துள்ளது.
கடந்த 2ம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இவரைக் கைது செய்தனர்.
குறித்த வழக்கு இன்று மீளவும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, 25,000 ரூபா ரொக்கப் பிணையிலும், 10 இலட்சம் ரூபாவான இரண்டு சரீரப்பிணையிலும் அவரை விடுவிக்க கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்க பண்டார உத்தரவிட்டார்.