உங்கள் குழந்தையை பிறப்பதற்கு முன்னரே நீங்கள் பார்க்கனுமா..?

விஞ்ஞான வளர்ச்சி என்பது மக்களுக்கு நல்லது, கெட்டது என இரு வகையிலும் பலனை அளித்து வருகிறது. ஆதி காலம் முதல் ஒரு பெண் கருத்தரித்தால் அவள் என்ன குழந்தையை ஈன்றேடுக்கிறார் என்பதை பத்து மாதம் பொறுத்திருந்து தான் பார்த்தனர்.

ஸ்கேனிங் என்ற தொழில்நுட்பம் வந்த பிறகு பிரசவ காலத்தின் போதே ஆணா, பெண்ணை கண்டறிந்து கூறினர். இதன் காரணமாக பெண் சிசுக் கொலைகள் தான் அதிகரித்தன.

இப்போது இதையும் தாண்டி, கருவில் சிசு வளரும் போதே அவரை நேரில் காண வழிவகுத்துள்ளது புதியதோர் தொழில்நுட்பம். இதன் மூலமாக ஒரு தாய் தன் குழந்தையை கண்டும் உள்ளார். அவரது அனுபவம் இங்கு காணலாம்..

வி.ஆர்…

விர்சுவல் ரியாலிட்டி என்பதன் சுருக்கமே வி.ஆர்., இந்த தொழில்நுட்பத்தின் மூலமாக இல்லாத ஒன்றையும் காண்பிக்க முடியும், காண முடியாததையும் காண்பிக்க முடியும்.

ஆச்சரியம் அளிக்கும் அனுபவம்

4D அல்ட்ராசவுண்ட் மூலம் ஸ்கேன் செய்து, பிறக்காத குழந்தயை வி.ஆர். தொழில் நுட்பத்தின் மூலம் காண்பது வாழ்நாள் பாக்கியம் என்றே கூறலாம். இது ஒரு ஐடியாவாக பிறந்து, அதை செயல்படுத்தியும் காட்டியுள்ளனர்.