இலங்கையுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை ஏற்படுத்துவது தொடர்பில் நியுசிலாந்து அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.
நியுசிலாந்தின் வர்த்தகத்துறை அமைச்சுர் டொட் மெக்லே இதனைத் தெரிவித்துள்ளார்.
தாம் சுவிட்சர்லாந்தில் வைத்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்த போது இந்த விடயம் குறித்து அவதானம் செலுத்தியதாக அவர் நியுசிலாந்தின் அரச வானொலியிடம் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இரண்டு நாடுகளிலும் பரஸ்பரல ராஜதந்திர மையங்களை திறக்கவும் இணக்கம் காணப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.