தொடர்ந்தும் தவறான தீர்ப்புகளை வழங்கும் இலங்கை நடுவர் தர்மசேனாவின் செயலால் ரசிகர்கள் விரக்தி..

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டியில் இலங்கையை சேர்ந்த நடுவர் குமார் தர்மசேனாவின் செயலால் ரசிகர்கள் கோபமடைந்துள்ளனர்.

சமீப காலமாக நடுவர் குமார் தர்மசேனா தவறான தீர்ப்புகளை வழங்கி வருவதால் அவர் விமர்சனங்களுக்கு உள்ளாகி உள்ளார்.

வங்கதேசம்- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான தொடரின் போது தவறான தீர்ப்பால் விமர்சிக்கப்பட்ட அவர், டெஸ்ட் தொடரிலும் அதே தவறை செய்தார்.

அதே போல் 5 போட்டிகளை கொண்ட இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரிலும் அவர் தவறான தீர்ப்புகளை வழங்கினார்.

இந்நிலையில் நேற்று(20) கட்டாக்கில் நடந்த 2வது ஒருநாள் போட்டியில் குமார் தர்மசேனா குழப்பத்தை ஏற்படுத்தினார். இந்தப் போட்டியில் 3வது நடுவராக செயல்பட்டார் தர்மசேனா.

இந்நிலையில் 47வது ஓவரில் பும்ரா வீசிய பந்தில் பிளன்கெட் LPW முறையில் ஆட்டமிழந்தார். ஆனால் ரிவியூவில் அது அவுட் இல்லை என தெரிந்தது.

அதனை சோதித்த 3வது நடுவரான தர்மசேனா, களநடுவர் சவுத்திரியிடம் அவுட் என்று கூறியுள்ளார். இதனால் அவரும் அவுட் என கையை உயர்த்தினார்.

திடீரென அவர் மீண்டும் அவுட் இல்லை என்றார். இதனால் சிறிது நேரம் மைதானத்தில் குழப்பமான சூழ்நிலை உண்டானது.

குமார் தர்மசேனாவின் இந்த செயல் சமூகவலைதளத்தில் தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வருகிறது.

[youtube url=”https://www.youtube.com/watch?v=Fn1o8lclVjw” width=”560″ height=”315″]