பிரதம வேட்பாளராக மஹிந்த ராஜபக்ஷவை பெயரிட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரன் என்றழைக்கப்படும் கருணா அம்மான் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுநத்திர கட்சியை பாதுகாப்பதற்கான திறனும் அனுபவமும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் மாத்திரமே இருப்பதாக அவர் இங்கு சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒன்றின் பின் ஒன்றாக பலமுறை தோல்வியுற்ற ரணில் விக்ரமசிங்க தற்போது தன் கட்சியை பாதுகாக்கும் வேலையை மாத்திரம் மேற்கொள்ள வேண்டும்.
தற்போது அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் இவ்வாறான சூழ்நிலைக்கு திறமைமிக்க மஹிந்த ராஜபக்ஷ என்ற நபரே பொறுத்தமானவர் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
மஹிந்த ராஜபக்ஷவுக்கு வேட்பு மனு வழங்க முடியாதென அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன வெளியிட்ட போலியான கருத்துக்களை அவர் மூலமாகவே நாட்டிற்கு வெளிபடுத்த வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மஹிந்தவை பிரதமராக்கும் போராட்டத்திற்கு எனது முழுமையான ஆதரவை வழங்குவேன் எனவும் தெரிவித்ததாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.