ஸ்ரீ லங்கா எயார் லைன்ஸ் வானூர்தி சேவை நிறுவனம் உள்ளிட்ட அனைத்து அரசாங்க நிறுவனங்களிலும் கடந்த காலத்தில் செயற்பட்ட மாபியா இன்றும் தொடர்வதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான கபீர் ஹசீம் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று(20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் பொது கருத்து வெளியிட்ட கபீர் ஹசீம்;
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஸபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் ஏ 350 900 ரக வானூர்திகள் நான்கை கொள்வனவு செய்ய தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.
குறித்த இந்த விமானம் ஒன்றின் அப்போதைய சந்தைப் பெறுமதி 9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாவாகும். ஆனால், 1.4 மில்லியன் டொலர் ரூபாவுக்கு விமானம் ஒன்றைக் கொள்வனவு செய்ய கைச்சாத்திடப்பட்டிருந்தது.
இந்த நான்கு வானூர்திகளையும் கொள்வனவு செய்தால் 4 ஆயிரத்து 320 கோடி ரூபா நட்டம் நாட்டுக்கு ஏற்படும். எனவே, இந்த உடனபடிக்கையை இரத்துச் செய்ய வேண்டும் என்று அமைச்சர் கபீர் ஹசீம் தெரிவித்தார்.
இதேவேளை, ஸ்ரீ லங்கா எயார் லைன்ஸ் வானூர்தி நிறுவனத்தில் செயற்படும் மாபியாவை ஒழிக்க முடியாமை குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சர் என்ற அடிப்படையில் தாம் கவலையடைவதாகவும் கபீர் ஹசீம் மேலும் தெரிவித்துள்ளார்.