மஹிந்தவுடனான முதலமைச்சர்களது பேச்சுவார்த்தை தோல்வியில்…

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் மாகாண சபை முதலமைச்சர்களுக்கும் இடையே இன்று(22) இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்றிணைந்த எதிர்க் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே இதனைத் தெரிவித்துள்ளார்.

எனினும் பேச்சுவார்த்தைக்கு பிறகு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மாகாண சபை முதலமைச்சர்கள், இதன்போது இணக்கப்பாட்டுக்கு வரமுடியாவிடினும், எதிர்வரும் காலத்திலும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு இரண்டு தரப்பினருக்கும் இடையே இணக்கப்பாடு ஏற்படக்கூடும் எனத் தெரிவித்துள்ளனர்.

சுதந்திர கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்தும் 7 மாகாண சபைகளின் முதலமைச்சர்களின் கோரிக்கைக்கு அமைய இன்று காலை இந்த பேச்சுவார்த்தை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கொழும்பு விஜயராமையில் அமைந்துள்ள இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.