இலங்கை மற்றும் தென்னாபிரிக்காவுக்கும் இடையில் இடம் பெற்ற இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணி 3 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடி தென்னாபிரிக்கா அணி 19.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 113 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணி 19.4 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
இலங்கை அணி சார்பாக அதன் தலைவர் அஞ்சலோ மெத்திவ்ஸ் ஆட்டமிழக்காமல் 54 ஓட்டங்களை பெற்று கொண்டார்.


