பிணை முறி மோசடி தொடர்பான கோப் குழுவின் அறிக்கைக்கு எதிராக உயர் நீதிமன்றில் மனு தாக்கல்…

மத்திய வங்கியின் பிணை  முறி மோசடி தொடர்பான கோப் குழுவின் அறிக்கைக்கு எதிராக உயர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கோட்டை நாலந்தாராமாதிபதி தீனியாவல பாலித தேரரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த மனுவின் பிரதிவாதிகளாக கோப் குழுவின் தலைவர் சுனில் ஹந்துநெத்தி உட்பட்ட 26 பேரது பெயரிடப்பட்டுள்னர்.

குறித்த மனு நாளை(24) அல்லது எதிர்வரும் 26ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள தமது சார்பான சட்டத்தரணிகள் கோரியுள்ளதாக தீனியாவல பாலித தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.