மஹிந்தவிடம் கேள்விக் கணைகளைத் தொடுக்கும் அமைச்சர்

மஹிந்த ராஜபக்ஸவின் எதிர்கால நோக்கம் என்னவென அமைச்சர் நவீன் திஸாநாயக்க கேள்வி எழுப்பியுள்ளார்.

தோட்ட உரிமையாளர்களுக்கு மானியம் வழங்கும் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

ராஜபக்ஸ பல குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பஸில் ராஜபக்ஸமீண்டும் வருவாரா? அவர்களுக்கு தூய்மையான கரங்கள் உண்டா? அவர்கள்நியாயமாக சம்பாதித்துள்ளார்களா? – என்று நான் கேட்கின்றேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஒரு விரலை மற்றொரு பக்கம் நீட்டும் போது 3 விரல்கள் எம்மை நோக்கியுள்ளன என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.