ஜனாதிபதி தலைமையில் சுதந்திரக் கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் விசேட சந்திப்பு…

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இன்று(24) சந்திக்க உள்ளனர்.

இன்று பிற்பகல் 3.00 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் இந்த விசேட சந்திப்பு நடத்தப்பட உள்ளது.

செயற்பாட்டு அரசியலில் ஈடுபட்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் பிரதி அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பில் இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட உள்ளது.

சுதந்திரக் கட்சி, கட்சி மறுசீரமைப்பு பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.