வத்தளை – ஹூணுபிடிய பகுதியில் பொலித்தின் தொழிற்சாலை ஒன்றில் சற்று முன்னர் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும், தீயணைப்பு படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை கிரிபத்கொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.