துமிந்த சில்வா தொடர்பாக வழக்கு விசாரணை, பெப்ரவரி மாதம் 13ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேலதிக நீதவான் அருணி ஆட்டிகல, மேற்குறித்த உத்தரவை இன்று(26) பிறப்பித்தார்.
துமிந்த சில்வா, இன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜராகாத நிலையில், இந்த வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்த வழக்கில் ஆஜராகாமை தொடர்பில் வைத்திய அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.
தொடர்ந்து 3 வருடங்களாக தன்னுடைய கடன் மற்றும் சொத்து தொடர்பில் உரிய முறையில் இவர் தகவல்களை வெளிப்படுத்தவில்லை என்று கூறி இலஞ்சம் மற்றும் ஊழல் எதிர்ப்பு விசாரணை ஆணைக்குழுவானது இவர் மீது வழக்கு தொடர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.