அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் இணைப்பாளர் லஹிரு வீரசேகர கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதன்போது அவரை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
நீதிமன்றத்தின் பிணைக்கான நிபந்தனைகளை மீறியமைக்காக அவர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்டிருந்த அவரை விடுவித்த போது ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டிருந்தது.
எனினும் இதனை மீறி கடந்த 19 ஆம் திகதி அவர் தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக மேற்கொண்ட ஆர்ப்பாட்டம் காரணமாவே கைதாகியிருந்தார்.
அவருடன் கைது செய்யப்பட்டிருந்த மேலும் 7 பேர் 2 லட்சம் ரூபா வீதம் சரீர பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.