தனக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்குமாறு விமல் வீரவங்ச கோரிக்கை…

நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துக் கொள்ளும் போது,தனக்கு போதுமான பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச குற்றம் சுமத்தியுள்ளார்.

ஆதலால், தனக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்குமாறு விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

இன்று(26) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச,மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்த ஆட்சி காலத்தின் போது,அரச வாகனங்களை முறைக்கேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில் விமல் வீரவங்ச கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.