பிணை முறி மோசடி குறித்து விசாரிக்க முதலில் ஐ.தே.கட்சியினரே உதவியது – ரஞ்சன்…

தற்போதைய அரசாங்கத்தை ஆட்சி அதிகாரத்திற்கு கொண்டு வருவதற்கு பிரதானமாக செயற்பட்டு வந்த ஐக்கிய தேசியக் கட்சி, பிணைமுறி மோசடிகளை மூடி மறைக்க எவ்விதத்திலும் உதவப் போவதில்லை என பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

கோப் குழுவின் தலைமைப் பதவிக்கு சுனில் ஹந்துனெத்தியை நியமிக்க நானும் முக்கிய பங்கு வழங்கியிருந்தேன். பிணை முறி மோசடி போன்ற குற்றச்சாட்டு ஒன்றை மூடி மறைக்க வேண்டுமாயின் கோப் குழுவின் தலைவராக சுனில் ஹந்துனெத்தியை நியமித்திருக்க வேண்டியதில்லை.

கடந்த 2015ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடைபெற்ற தினமன்று அர்ஜூன் மகேந்திரன், அர்ஜூன் அலோசியஸ் ஆகியோர் நாமல், பசில் ஆகியோருடனேயே இருந்தார்கள்.

அவ்வாறான ஓர் நிலையில் பிணை முறி மோசடிப் பணம் எங்கு சென்றது என்பது பற்றி தெளிவுபடுத்த வேண்டியதில்லை. இந்தப் பணத்தை கண்டுபிடிக்க முயற்சிக்கப்படுகின்றது.

இந்த மோசடியை மூடி மறைக்க வேண்டிய அவசியமில்லை எனவும் பிரதி அமைச்சர் ரஞ்சன் மேலும் தெரிவித்துள்ளார்.