ஜாலிய விக்ரமசூரியவின் விளக்கமறியல் நீடிப்பு.

அமெரிக்காவிற்கான முன்னாள் இலங்கை தூதுவர் ஜாலிய விக்ரமசூரிய எதிர்வரும் 09 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு – கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன விளக்கமறியல் நீடிப்பு உத்தரவை இன்று(27) பிறப்பித்தார்.

எவ்வாறாயினும் அவரது சட்டத்தரணியினால் முன்வைக்கப்பட்ட பிணை மனு நீதவானால் நிராகரிக்கப்பட்டது.

அமெரிக்காவிற்கான இலங்கை தூதுரகத்திற்காக கட்டடம் ஒன்றைக் கொள்வனவு செய்த விடயத்தில் முறையற்ற விதத்தில் நிதியைப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் ஜாலிய விக்ரமசூரிய கைது செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது