சர்ச்சைக்குரிய மாலபே தனியார் மருத்துவ கல்லூரியில் மஹிந்தவுக்கும் பங்கு…

சர்ச்சைக்குரிய மாலபே தனியார் மருத்துவ கல்லூரியில் மஹிந்தவுக்கும் பங்கு…

சர்ச்சைக்குரிய மாலபே தனியார் மருத்துவ கல்லூரியை ஆரம்பிக்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 600 மில்லியன் ரூபா வழங்கியதாக அவைத் தலைவர் லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்

குறித்த பல்கலைக்கழகத்தை ஆரம்பிப்பதற்காக கடன் அடிப்படையில் மஹிந்த 600 மில்லியன் ரூபாவினை வழங்கியதாக நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு கடந்த அரசாங்கத்தின் ஆதரவுடன் ஆரம்பிக்கப்பட்ட மாலபே தனியார் மருத்துவ கல்லூரியையும் அதன் மாணவர்களையும் பாதுகாக்கும் பொறுப்பு இந்த அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் ஏனைய பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளர்களுக்கு நிலவி வரும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தனியார் கல்வித்துறையை தரமுயர்த்தி மேம்படுத்துவது ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடாக அமைந்துள்ளது.

மாலபே தனியார் மருத்துவ கல்லூரியை கொண்டு நடாத்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென லக்ஷமன் கிரியல்ல இதன்போது கோரியுள்ளார்.