பல்கலைக்கழக கல்விசார் ஊழியர்கள் பணி பகிஷ்கரிப்பில்…

பல்கலைக்கழக கல்விசார் ஊழியர்கள் நாளை(07) அடையாள பணி பகிஷ்கரிப்பினை மேற்கொள்ள தயாராகி வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், நாளை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு முன்னால் இவர்கள் போராட்டம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மாத சம்பளத்தை அதிகரிக்கும் சுற்றறிக்கையை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வௌியிடாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே குறித்த இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.